தொழில்நுட்பம்

அசத்தல் அம்சங்களுடன் சோனியின் குட்டி டிரோன் அறிமுகம்

சோனி நிறுவனம் 2021 சிஇஎஸ் விழாவில் ஏர்பீக் டிரோன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த டிரோனில் ஆல்பா மிரர்லெஸ் கேமராவை பொருத்தி அதிக தரமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். புதிய சோனி ஏர்பீக் உலகின் சிறிய டிரோன் ஆகும். ஆல்பா சிஸ்டம் பொருத்தப்படும் பட்சத்தில் இதை கொண்டு பொழுதுபோக்கு துறையில் பல்வேறு புதுமைகளை முயற்சிக்க முடியும். ஏர்பீக் டிரோன் மற்றும் α7S III புல் பிரேம் மிரர்லெஸ் சிங்கில் லென்ஸ் கேமரா கொண்டு எடுக்கப்பட்ட வீடியோவை சோனி வெளியிட்டு இருக்கிறது.

முதற்கட்டமாக வியாபாரங்களுக்கான புதிய தொழில்முறை புகைப்படம் மற்றும் வீடியோ தயாரிப்புக்கான தளத்தை இந்த ஆண்டு வெளியிட சோனி திட்டமிட்டு இருக்கிறது. இந்த திட்டம் பற்றிய புது தகவல்களை அவ்வப்போது வெளியிடுவதாக சோனி தெரிவித்து உள்ளது. மேலும் தொழில்முறை டிரோன் பயன்பாட்டாளர்களிடம் இருந்து கருத்துக்களை பெற சோனி நிறுவனம் அமெரிக்கா மற்றும் ஜப்பானை சேர்ந்தவர்களிடம் கூட்டு சேர இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top