உள்நாட்டு செய்திகள்

அசிட் தாக்குதலில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவருக்கு பலத்த காயம் – விசாரணை ஆரம்பம்

காலி – தல்பிட்டிய பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் மீது அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவரினால் இந்த அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண்ணை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த மூவரும், காலி – கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மூவரின் நிலைமையும் கவலைக்கிடமாகவுள்ளதென வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த மூவர் மீதே அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பத்தேகம நீதிமன்றத்திற்கு சென்று, வீடு திரும்பிய வேளையிலேயே அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்திய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை காலி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top