உள்நாட்டு செய்திகள்

அடையாளம் தெரியாத நபர் உட்பட மூவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உட்பட மூவர் இன்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி,கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 211ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு 13 மற்றும் 12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரும் அடையாளம் காணப்படாத ஒருவரும் என மூவர் உயிரிழந்துள்ளனர். 93, 76 வயதுகளை உடையவர்களே கொழும்பில் உயிரிழந்துள்ள அதேவேளை, அடையாளம் தெரியாத நபரின் வயது 70 முதல் 80க்கு இடையில் இருக்கலாம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அடையாளம் தெரியாத நபர் மருதானை பகுதியிலிருந்தே அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர் என தெரிவிக்கப்படுகின்றது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top