பொழுது போக்கு

அனிதா சம்பத்தின் தந்தையும் எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலிருந்து இரு தினங்களுக்கு முன் வெளியேற்றப்பட்ட செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் தந்தையும் எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார்.

பெங்களூரு சென்ற இடத்தில் இறந்த அவரது உடல் இன்று பிற்பகல் சென்னை கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்,சி.சம்பத் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பத்திரிகையாளரான இவர் ’தாய்’ வார இதழில் பணிபுரிந்தார். தமிழின் பிரபல வார இதழ்கள் அனைத்திலும் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது எழுத்துக்களில் நகைச்சுவை அதிகம் இழையோடும்.இவரது குடும்பம் சென்னை திரு.வி.க. நகரில் வசிக்க இவர் திருவாரூரிலும், சென்னையிலும் மாறி மாறி வாழ்ந்து வந்தார்.

சம்பத்துக்கு மனைவியும் அனிதா, அவரது தம்பி என இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
அனிதா கலந்து கொண்ட பிக்பாஸ் அறிமுக மேடையில் கமலே ஆர்.சி.சம்பத் பற்றிப் பேசியது குறிப்பிடத்தக்கது.
Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top