தொழில்நுட்பம்

அமேசான் தளத்தில் ஐபோன்களுக்கு சிறப்பு சலுகை

அமேசான் ஆன்லைன் தளத்தில் ஆப்பிள் டேஸ் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஐபோன் 11 சீரிஸ், ஐபோன் 7 மற்றும் இதர ஆப்பிள் சாதனங்களுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அமேசானின் ஆப்பிள் டேஸ் சிறப்பு விற்பனை டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த விற்பனையின் போது ஐபோன் 11 மாடல் ரூ. 51,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் இதுவரை இல்லாத வகையில் ஐபோன் 7 மாடல் ரூ. 23,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் மட்டுமின்றி ஐபேட் மினி வாங்குவோருக்கு ரூ. 5 ஆயிரம் சேமிப்பு மற்றும் ரூ. 3 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இதேபோன்று மேக்புக் ப்ரோ மாடலுக்கும் ரூ. 6 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுவும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top