உள்நாட்டு செய்திகள்

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலரும் தனிமைப்படுத்தலில்

கண்டி பொல்கொல்ல பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேசசபை ஊழியர்கள் என பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட அக்கரப்பத்தனை பிரதேச சபைத் தலைவர் கதிர் செல்வனுக்கு கொரோனா தொற்று உள்ளமை இனம் காணப்பட்டதை அடுத்தே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன்படி அமைச்சர்கள் சி.பி.ரத்நாயக்க, ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கூறுகையில், கொட்டகலவில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையக வளாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் வைக்கப்பட்டுள்ள அக்கரபத்தன பிரதேச சபைத் தலைவர் கதிர் செல்வனின் நெருங்கிய கூட்டாளியாக ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரின் பி.சி.ஆர் சோதனை முடிவைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருவதாக டாக்டர் பிரதாபசிங்க கூறினார். அவர் டிசம்பர் 17-18 முதல் கதிர் செல்வத்துடன் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அமைச்சர் சி. பி. ரத்நாயக்க, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் பியதிஸ்ஸ மற்றும் மதுரபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் அண்மையில் தலவாகொல்லையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் சி. பி. ரத்நாயக்கவுடனான சந்திப்பில் கலந்து கொண்டதை அடுத்து தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி. எஸ். பி.திஸநாயக்க சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், தலவாகலை லிந்துல மேயர், நுவரெலியா தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர், கொட்டகல, அம்பகமுவ, நோர்வூட், மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளைச் சேர்ந்த 10 ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொழும்பில் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் இந்த குழு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top