உள்நாட்டு செய்திகள்

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துதல் – சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு விளக்கமளிப்பு

மத்திய வங்கியின் முறி மோசடி சம்பவத்தின் சந்தேகநபரான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு ஒப்படைக்கும் கோரிக்கை தொடர்பில் சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு ஒப்படைக்கும் கோரிக்கை இன்னும் நிலுவையில் உள்ளதாகவும், இன்று ஒரு விளக்க குறிப்பு சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் நீதிமன்ற செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top