பொழுது போக்கு

அவங்க இல்லாமல் ஒருநாள் கூட இருக்க முடியாது – மேகா ஆகாஷ்

நடிகைகளில் மேகா ஆகாஷ் அம்மா செல்லம். அம்மாவுடன் தோழி போலத்தான் பழகுவேன் என்று கூறியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘ஆமாம். உண்மைதான். நானும் அம்மாவும் நெருங்கிய தோழிகள் மாதிரிதான் பழகுவோம். அம்மா ரொம்ப இளமையாக என்னை மாதிரியே இருப்பார். நிறைய பேர் எங்களை அக்கா-தங்கைன்னுதான் நினைப்பாங்க. அம்மாகிட்ட நான் எதையுமே மறைக்க மாட்டடேன். அம்மா இல்லாம என்னால ஒருநாள்கூட இருக்க முடியாது. அம்மா பிந்து ஆகாஷ் நிறைய விளம்பரப் படங்களை இயக்கி இருக்கிறார். ஊரடங்கில் எங்க ரெண்டு பேருக்குமே ஷூட்டிங் இல்லாததால, ஏதாவது புதுசா முயற்சி பண்ணலாம்னு யோசிச்சோம். ‘பேசினால் போதும் அன்பே’ குறும்படத்துக்கான ஐடியா அப்படி வந்ததுதான். விவாகரத்துக்கு முடிவெடுத்துள்ள இளம் தம்பதியின் வாழ்க்கை, ஊரடங்கால எப்படி மாறுதுங்கிறதுதான் கதை. நான்தான் இதுல ஹீரோயின். அம்மா இயக்கத்துல நான் நடித்த முதல் அனுபவம் இது. வித்தியாசமாகவும், ஜாலியாகவும் இருந்தது’. இவ்வாறு அவர் கூறினார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top