அரசியல்

ஆறு மாவட்டங்களில் மாதிரி தேர்தல்

பொதுத் தேர்தலை முன்னிட்டு 6 மாவட்டங்களில் இன்றைய தினம் (14) தேர்தல் ஒத்திகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணம், அம்பாறை, பதுளை, களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் மாதிரி வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

கம்பஹா, புத்தளம், மாத்தளை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை கேந்திரமாக கொண்டு நேற்றைய தினம் (13) மாதிரி தேர்தல் நடத்தப்பட்டது.

நாளைய தினம் (15) முல்லைத்தீவு மாவட்டத்திலும் எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட இருவேறு இடங்களிலிலும் மாதிரி தேர்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி வரை நாடு முழுவதும் மேலும் 15 வாக்களிப்பு ஒத்திகைகளை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் பேணுவதில் காணப்படும் நடைமுறை சிக்கல்கள் தொடர்பில இதன்போது கண்காணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top