உலகம்

இங்கிலாந்தில் வேகமாக பரவும் புதியவகை கொரோனா – விமான போக்குவரத்திற்கு தடை

இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என தெரியவந்துள்ளது. இந்த புதிய வைரஸ் தொடர்பாக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இங்கிலாந்து அரசு அந்நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும், மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்று புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புதிய கொரோனா வைரஸ் காரணமாக பல ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்துடனான விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன.

இந்நிலையில், இங்கிலாந்தில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பாக விவாதிக்க இந்தியாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாளை அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. சுகாதார சேவைகள் டைரக்டர் ஜெனரல் தலைமையிலான சுகாதார அமைச்சகத்தின் கூட்டு கண்காணிப்புக் குழு இந்த கூட்டத்தை நாளை நடத்துகிறது. இந்த கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதியும், கூட்டு கண்காணிப்புக் குழுவின் உறுப்பினருமான டாக்டர் ரோடெரிக்கோ எச் ஓப்ரின் உள்பட முக்கிய அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர். இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவரும் சம்பவம் உலக நாடுகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top