உலகம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு கோடியை கடந்தது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளதுடன் 95.50 இலட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, ‘இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. இதற்கமைய மொத்த பாதிப்பு 10,004,599 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 25,153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 347 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,45,136 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95,50,712 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் 3,08,751 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12வது நாளாக 4 இலட்சத்திற்கும் குறைவாக உள்ளது. மொத்த உயிரிழப்பு 1.45 சதவீதமாக நீடிக்கிறது. குணமடையும் விகிதம் 95.46 சதவீதமாக உயர்ந்துள்ளது’ என சுகாதார அமைச்சின் தகவல் தெரிவிக்கின்றது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top