உலகம்

இந்தியாவில் விஷ சாராயம் குடித்த 20 பேர் பலி – அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் நேற்று விஷ சாராயம் குடித்த 10 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மேலும் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இது பற்றி மாநில அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நான் மிகுந்த வருத்தமடைந்தேன். காவல் நிலைய அதிகாரி உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். மேலும் இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்படும். குற்றவாளிகள் நீதியில் இருந்து தப்ப முடியாது’ என்றார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top