விளையாட்டு

இன்னும் ஐந்து வருடம் விளையாடுவேன் – கிறிஸ் கெய்ல் சொல்கிறார்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். 41 வயதாகும் இவர் தனது 20 வயதில் கடந்த 199-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனால். 2000-த்தில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். டி20 கிரிக்கெட் போட்டியில் 2006-ல் அறிமுகம் ஆனார். ஆகஸ்ட் 2019-ல் இந்தியாவுக்கு எதிராக விளையாடியதுதான் கடைசி ஒருநாள் போட்டி. 2014-ம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.

41 வயதாகும் கிறிஸ் கெய்ல் 2019 உலக கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் ஐந்து வருடங்கள் விளையாடுவேன். இரண்டு உலக கோப்பைகள் இன்னும் பாக்கி உள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘நிச்சயமாக, தற்போது ஓய்வு பெறும் திட்டம் இல்லை. இன்னும் ஐந்து வருடங்கள் விளையாடுவேன் என்று நம்புகிறேன். ஆகவே, 45 வயதிற்கு முன் வாய்ப்பே இல்லை. இன்னும் இரண்டு உலக கோப்பை பாக்கி உள்ளது’’ என்றார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top