
நாடுமுழுவதும் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு நான்கு கட்டங்களாக மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
வலைய ரீதியாக மாலை 06 – 07 / 07 – 08 / 08 – 09 / 09 – 10 மணி வரை ஒவ்வொரு மணித்தியாலங்கள் மின் விநியோகம் தடைப்படும் என மின்சாரசபை அறிவித்துள்ளது.
லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாகவே இந்தநிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனை நிவர்த்தி செய்ய 4-5 நாட்கள் தேவைப்படும் எனவும் மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்தார்.
இதனை சரி செய்யும் பணிகளில் மின்சாரசபை பொறியியலாளர் மற்றும் தொழிநுட்பவியலாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் , அவர் மேலும் தெரிவித்தார்.
