உள்நாட்டு செய்திகள்

இராவணன் கோட்டையில் நிர்மூலமான இரண்டாவது கப்பல்…

இலங்கையின் திருக்கோவில் சங்கமன்கந்தமுனையில் 1980 களில் ஓர் கப்பல் நிர்மூலமானது அதன் உருவத்தின் எச்சம் கடந்த வருடமே கடலோடு கரைந்தது. இது குமரிக்கண்டம் ஆண்ட இராவணனின் கடலில் அமிழ்ந்த கோட்டையில் மோதுண்டே விபத்திற்குள்ளானது.

இராவணன் கோட்டை என சிறப்பிக்கப்படும் சங்கமன்கந்தமுனை பற்றி இலங்கையர் பலருக்கு தெரியாது இருக்கலாம். முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி மாத்திரம் தனது ஆய்வு நூலான திருக்கோவில் ஶ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயம் பற்றி எழுதியுள்ள புத்தகம் ஒன்றில் மாத்திமே இந்த ஆய்வு இடம்பெற்றுள்ளமை மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது.

உருவத்திலும் பத்து விடயங்களை ஒரே நேரத்தில் அவதானிக்கும் சிவபக்தனான இராவணின் கோட்டை திருகோணமலையில் மாத்திரம் அல்ல திருக்கோவிலின் சங்கமன்கந்தமுனை வரை பரந்து இருந்தது.

அதுமாத்திரமன்றி சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கண்டி தலைநகரில் உள்ள “கத்தரகமதெய்யோ” என சிங்கள மக்களால் கையெடுத்து வணங்கப்படும் முருகன் ஆலய வளாகத்திற்கு சென்றடையும் ஓர் சுரங்க பாதை பற்றிய செவிவழி கதைகளும் உண்டு.

தனது சாம்ராஜ்யம் கடலில் மூழ்கிய போதும் அதன் கீர்த்திகள் இன்றும் இராவண மன்னனை பறைசாற்றும். இந்த சுரங்க வழி பயணம் பற்றி சீதாஎலிய குகை ஆய்வுகள் ஆயிரம் பதில்களை இலங்கையருக்கு வழங்கி இருந்தாலும் மொழிகளின் அடிப்படை வாதம் அதனை ஒருபோதும் ஏற்காது.

இராவணின் கடலில் புதையுண்ட அரண்மனையில் கடல் நீரோட்டம் முட்டி மோதும் போது ஓர் பயங்கர ஓசை கடலில் எழும். அது சரியாக அமைந்திருப்பது இலங்கையின் அகலாங்கு கோட்டில் கிழக்கு திசையில் அமைந்துள்ள சங்கமண்கந்தமுனையிலாகும். இந்த ஓசையை தினமும் உணரலாம். இரவு நேரத்தில் தெளிவாக கேட்கும்.

ஆய்வாளர்கள் தங்களது ஆய்வு முயற்சிகளை இனி இங்கிருந்தும் ஆரம்பிக்கலாம்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top