உள்நாட்டு செய்திகள்

இறைச்சிக்கு மாடுகளை திருடிய கும்பல் சிக்கியது!

மாடுகளைத் திருடி இறைச்சிக்காக வெட்டிய ஐந்து திருடர்களை ஏறாவூர்ப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து இரண்டு மாடுகள் முச்சக்கரவண்டி மற்றும் இரண்டு மாடுகளில் வெட்டப்பட்ட இறைச்சி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். இம் மாடுகள் மயிலம்பாவெளி பிரதேசத்திலுள்ள நபர் ஒருவருக்குச் சொந்தமானவை. கடந்த மூன்று தினங்களில் அப் பண்ணையாளரது பத்து மாடுகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இம் மாடுகள் ஐயங்கேணி பிரதேசத்தில் வெட்டப்பட்ட நிலையில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட மாடுகளில் ஒன்றின் வயிற்றில் கன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஏறாவூர்ப்பொலிஸார் தெரிவித்தனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top