உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி- முதலில் யாருக்கு -வெளிவந்தது தகவல்

உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டநிலையில் அது உலகில் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் குறித்த கொரோனா தடுப்பூசி அடுத்த வருடம் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் நிலையில் அவற்றை முதலில் யாருக்கு செலுத்துவது என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் அச்சுறுதலில் உள்ளவர்களுக்கு முதலில் அது அளிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறியுள்ளார். இரண்டாவதாக கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தரப்பினர், பாதுகாப்பு பிரிவினர் ஆகியோக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார் என்று ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top