உள்நாட்டு செய்திகள்

இலங்கையின் சிரேஷ்ட நடிகைக்கு செலுத்தப்பட்டது கொரோனா தடுப்பூசி

இலங்கையைச் சேர்ந்த மூத்த நடிகை ஒருவர் கொவிட் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார். தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் புன்யா ஹென்தெனியா என்ற நடிகையே தடுப்பூசியை போட்டவராவார். இது தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது இன்று நாம் கொவிட் தடுப்பூசியின் முதல் பகுதியைப்பெற்றுள்ளோம். இந்த தொற்று நோய்க்கு விரைவில் ஒரு முடிவு கிட்டும் என தெரிவித்துள்ளார். குருலு பெட்ட (ரன்மெனிகா), சிகுரு தருவா (அனுலா), கம்பெரலிய (நந்தா), பராசுதுமல் (கமலா) மற்றும் ரன்சலு (சுஜாதா) போன்ற படங்களின் மூலம் இலங்கை சினிமா ரசிகர்களின் மனதை வென்ற ஒரு மூத்த நடிகை இவர் ஆவார். ஏற்கனவே இங்கிலாந்தில் வசிக்கும் யாழ்ப்பாண தமிழரான மருத்துவர் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top