எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அருங்காட்சியகத் துறைக்கு சொந்தமான அனைத்து அருங்காட்சியகங்களும் மீண்டும் திறக்கப்படவுள்ளன. இதனடிப்படையில், கொழும்பு தேசிய அருங்காட்சியகம் உட்பட 11 அருங்காட்சியகங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தேசிய அருங்காட்சியகத் துறை பணிப்பாளர் சனுஜா கஸ்துரியராச்சி தெரிவித்தார். காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை அருங்காட்சியங்கள் அனைத்தும் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, பார்வையாளர்கள் சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
