உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் ஒரேநாளில் ஏற்பட்ட அதிகளவான வாகன விபத்துக்கள் – 9பேர் உயிரிழப்பு!

கடந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறுபட்ட இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதியில் 90 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்களில் 74 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். குறித்த காலப்பகுதியில் வாகன விபத்துக்களில் 149 பேர் படுகாயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், 2,045 பேர் குடிபோதையில் வாகன செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top