இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாட்டின் 25 மாவட்டங்களிலும் 25 மூத்த ராணுவ அதிகாரிகள் தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட உள்ளனர். கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலகத்தால் இந்த நியமனங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் பின்வருமாறு.
வடக்கு மாகாணம்
மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஜி.எச்.எஸ். பண்டார – யாழ்ப்பாணம்
மேஜர் ஜெனரல் கே.என்.எஸ் கொடுவேகொட – கிளிநொச்சி
மேஜர் ஜெனரல் ஆர்.எம்.பி.ஜி. ரத்நாயக்க – முல்லைத்தீவு
மேஜர் ஜெனரல் W.L.P.W. பெரேரா – வவுனியா
மேஜர் ஜெனரல் ஏ.ஏ.ஐ.ஜே. பண்டார – மன்னார்
வட மத்திய மாகாணம்
மேஜர் ஜெனரல் ஜே.சி. கமகே – பொலன்னறுவா
மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம். லியனகே – அனுராதபுரம்
வட மேற்கு மாகாணம்
மேஜர் ஜெனரல் ஏ.பி.ஐ. பெர்னாண்டோ – புத்தளம்
பிரிகேடியர் பி.எம்.ஆர்.எச்.எஸ்.கே. ஹேராத் – குருநாகல்
மேல் மாகாணம்
மேஜர் ஜெனரல் கே.டபிள்யூ. ஆர். த ஆபே – கொழும்பு
மேஜர் ஜெனரல் என்.ஆர். லமாஹேவா – கம்பஹா
பிரிகேடியர் கே.என்.டி. கருணாபால – களுத்துறை
மத்திய மாகாணம்
மேஜர் ஜெனரல் ஹெச்.பி.என்.கே. ஜயபதிரண – நுவரெலியா
மேஜர் ஜெனரல் எஸ்.எம்.எஸ்.பி.பி. சமரகோன் – கண்டி
மேஜர் ஜெனரல் எஸ்.யூ.எம்.என். மானகே – மாத்தளை
சபரகமுவ மாகாணம்
பிரிகேடியர் ஜே.எம்.ஆர்.என்.கே. ஜெயமான்ன – இரத்தினபுரி
பிரிகேடியர் எல்.ஏ.ஜே.எல்.பி. உடோவியா – கேகாலை
கிழக்கு மாகாணம்
மேஜர் ஜெனரல் சி.டி. வீரசூரிய – திருகோணமலை
மேஜர் ஜெனரல் டி.டி. வீரகோன் – அம்பாறை
மேஜர் ஜெனரல் சி.டி. ரணசிங்க – மட்டக்களப்பு
ஊவா மாகாணம்
பிரிகேடியர் ஈ.ஏ.பி. எதிரிவீர – பதுள்ளை
கர்னல் டி.யூ.என். சேரசிங்க – மொனராகலை
தெற்கு மாகாணம்
மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி. பண்டார – ஹம்பாந்தோட்டை
மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஏ.எஸ். வனசிங்க – காலி
கர்னல் கே.ஏ.யு. கொடிதுவக்கு – மாத்தறை
