உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு – GMOA

நாட்டில் தற்போது ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் ஒருவர் கொரோனா தொற்றால் மரணிப்பதாக அறிக்கை தெரிவிக்கின்றது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அளுத்கே இதனை தெரிவித்துள்ளார். சில சந்தர்ப்பங்களில் மூன்று மணித்தியாலங்களுக்கு ஒரு மரணமும் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவ கூடும் என அவர் தெரிவித்துள்ளார். இதேநேரம், சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சுகாதார சேவைகளின் துணை அதிகாரி வைத்தியர் ஹேமந்த ஹெரத், பண்டிகை காலங்களில் பயணத்தைக் கட்டுப்படுத்துமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top