உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றினால் இன்று மூவர் உயிரிழப்பு – அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றினால் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் சற்று முன்னர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும் கொழும்பு 02ஐச் சேர்ந்த 87 வயதுடைய பெண்ணொருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே குறித்த இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதே நேரம்  கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று காலை ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில், மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லேரியாவாவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜா-எல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து இலங்கையில் இன்று மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றினால் மூவர் உயிரிழந்துள்ளதுடன், நாட்டில் மொத்தமாக 19 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top