உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்தது! உயிரிழப்பு 215 – முழு விபரம் வெளியானது

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது தற்போது 45 ஆயிரத்தையும் கடந்துள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் மொத்தமாக 468 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 451 பேர் பேலியகொட – மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர். ஏனைய 16 சிறைச்சாலை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். அதேநேரத்தில் பாகிஸ்தானிலிருந்து வருகை தந்த ஒருவரும் ஆவர். இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 45,242 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை பேலியகொட – மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 41,498 ஆக பதிவாகியுள்ளது. இது இவ்வாறிருக்க நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 565 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதன் காரணமா குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 37,817 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 7,210 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 583 பேர் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர். இதேவேளை கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரு நோயாளர்கள் உயிரிழந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றிரவு உறுதிப்படுத்தினார். அதனால் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் நாட்டில் 215 ஆக உயர்வடைந்துள்ளது.

01. இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவர். இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 2021 ஜனவரி 02ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட சுவாச நோய்த்தொற்று மற்றும் நுரையீரல் நோய்த்தொற்றின் சிக்கலான நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

02. இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதான ஆண் ஒருவர். வீட்டில் 2021 ஜனவரி 01 ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நிமோனியா மற்றும் கால்-கை வலிப்பு நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top