உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் தயாரான கொரோனா பாணியை முற்றாக நிராகரித்தது சுகாதார அமைச்சு

இலங்கையில் கொரோனாவை ஒழிக்கும் வகையிலான பாணி எனத் தெரிவித்து கேகாலையைச் சேர்ந்த ஆயுள்வேத மருத்துவரான தம்மிக்க பண்டார அறிமுகம் செய்த மருந்தை சுகாதார அமைச்சு முற்றாக நிராகரித்துள்ளது. அரசாங்க ஆய்வுத் திணைக்களத்தை மேற்கோள்காட்டி அரச ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

எனினும் என்ன காரணத்திற்காக இந்த மருந்து ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. அதேவேளை உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மேலும் இரண்டு மருந்து வகைகள் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதேய வேளை தம்மிக்க பண்டார தயாரித்த மருந்தை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அருந்தியதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே கேகாலையில் குறித்த மருத்துவரின் வீட்டுக்கு முன்னர் பாணியை பெறுவதற்காக நாளாந்தம் பெருமளவு சிங்கள மக்கள் திரள்வதுவும் அவர்களை பொலிஸார் கலைப்பதுவும் நாளாந்த நிகழ்வுகளாகி விட்டன.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top