அரசியல்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக த.கலைஅரசன் தெரிவு

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கு மாகாணங்களில் போட்டியிட்டு 9 ஆசனங்களைக் கைப்பற்றி இருந்ததுடன் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தினையும் பெற்றிருந்த இதேய வேளை யாழ் தேர்தல் மாவட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சோனாதிராஜா, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் தோல்வி அடைந்திருந்ததுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த ப.சரவணபவன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன்,சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர் தோல்வி அடைந்திருந்ததுடன் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட கோடிஸ்வரன் அவர்களும் இம் முறை தேர்தலில் தோல்வியினை சந்திருந்தனர்.

இதனால் தேசியப்பட்டியல் ஆசத்தினை கட்சியின் தலைவர், செயலாளர், இளைஞர் அணித் தலைவர் மற்றும் தோல்வியுற்ற வேட்பாளர்கள் கோரியிருந்த நிலையில் இம் முறை அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி எந்தவொரு பிரதிநிதித்துவத்தினையும் பெற முடியாத நிலை ஏற்பட்டமையினால் கட்சியினுடைய உயர்மட்டத்தினால் தேசியப்ட்டியல் நாடாளுமன்ற பிரதிநித்துவம் அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் வெற்றிடத்துக்கு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளருமான தவராஜா கலைஅரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top