
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை மற்றும் ஆரையம்பதி பிரதேசத்திற்கான இலங்கை வங்கி கிளை இடமாற்றப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண செயற்பாட்டு முகாமையாளர் டமித் எக்கநாயக்க மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் ஏ.பிரதீபன் திருகோணமலை மாவட்ட பிராந்திய முகாமையாளர் வி.பிரதீபன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இலங்கை வங்கி கிளை முகாமையாளர்கள் வங்கி ஊழியர்கள் மதகுருமார்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

????????????????????????????????????
இதன் போது மதகுருமார்களின் ஆசீர்வாதத்துடன் மத அனுஸ்டானங்களுடன் வாகரை மற்றும் ஆரையம்பதி பிரதேசத்திற்கான இலங்கை வங்கி கிளை திறந்து வைக்கப்பட்டதுடன்இ வாடிக்கையாளர்களினால் பணம் வைப்புச் செய்து வங்கி நடவடிக்கையினை ஆரம்பித்து வைக்கப்பட்டமுடன் மதகுருமார்கள் மற்றும் பணம் வைப்புச் செய்தவர்களுக்கு இலங்கை வங்கி கிளையினால் நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. வாகரை பிரதேசத்திற்கான இலங்கை வங்கி கிளை வாகரை பிரதேச சபைக்கு அருகில் தற்காலிகமாக இயங்கி வந்த நிலையில் டிஜிட்டல் தானியங்கியுடனான வங்கி சேவையினை வாகரை பிரதேச வைத்தியசாலைக்கு அருகில் புதிதாக இடமாற்றப்பட்டுள்ளதாகவும் கிளை முகாமையாளர்கள் தெரிவித்தனர்.

????????????????????????????????????
