உள்நாட்டு செய்திகள்

இலங்கை வந்துள்ள இங்கிலாந்து அணி வீரருக்கு புதிய வகை கொரோனா தொற்று!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இங்கிலாந்து அணியின் வீரரான மொயின் அலிக்கு புதிய வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார். தனிமைப்படுத்தப்பட்டுள்ள இங்கிலாந்து அணியின் வீரரான மொயின் அலிக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு இங்கிலாந்தில் பரவிவரும் குறித்த புதிய வகை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மொயின் அலியின் தனிமைப்படுத்தல் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதாரப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை காலியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top