உள்நாட்டு செய்திகள்

இலங்கை விமானம் திருகோணமையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை – சீனன்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து விமானியொருவருடன் பயணித்த PT 6 பயிற்சி விமானம் விபத்திற்குள்ளாகியது. கந்தளாய் – சூரியபுர பகுதியில் விமானம் விபத்திற்குள்ளாகியதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார். முன்னதாக குறித்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விபத்திற்குள்ளான விமானத்திலுள்ள விமானியை மீட்க மீட்புக்குழு மற்றும் மருத்துவக்குழாம் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக இலங்கை விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜயசிங்க குறிப்பிட்டார். பயிற்சி விமானியுடன் மாத்திரமே குறித்த விமானம் பயணித்துள்ளது. மேலும் குறித்த விமானத்தில் பயிற்சியை மேற்கொண்ட விமானியும் உயிரிழந்துள்ளதாகவும் விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து குறித்த விமானம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை விமானப்படை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top