ஆரோக்கியம்

இளகிய மனம் கொண்டவர்கள் மன அழுத்தங்களுக்கு உள்ளாகும் போது எளிதில் மனச்சோர்வில் வீழ்கின்றனர் – பொது வைத்தியர் டாக்டர் முருகமூர்த்தி

(நேர்காணல் – பைஷல் இஸ்மாயில்) கூடுதலான குறைபாடுகள் மற்றும் பதட்டம் போன்றவை மன அழுத்தம் ஏற்பட ஒரு காரணமாக இருக்கிறது. அதாவது, சிக்கலான சமூக,  குடும்ப மற்றும் உயிரியல் காரணிகளால் உண்டாகும் பாலியல் தொல்லைகள்,  உடலியல் தொல்லைகள், மனோ ரீதியான தாக்கங்கள்,  குடும்பத்தில் வன்முறை,  தாக்குதல்கள்,  குழந்தைப் பருவ அல்லது இளம் பருவங்களில் ஏற்படும் கோளாறுகளும் மன நோய் ஏற்பட காரணமாகின்றன  என்கிறார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட பொது வைத்தியர் டாக்டர் முத்து முருக மூர்த்தி. அவர்கள் வழங்கிய செவ்வியை இங்கே தருகிறோம்

மன அழுத்தம் என்றால் என்ன?சவால்கள் நிறைந்த உலகில் ஆசை நிராசையாவதும் ஏமாற்றங்கள் உண்டாவதும்  உறவு பிரிவதும் வாழ்வில் நடக்கும் ஒன்றாகும். இருப்பினும்  உண்மையை எதிர்கொள்ளும்போது வாழ்வில் ஏமாற்றத்தையும் பிரிவின் துயரையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனித மனம் தடுமாறும் தடமாறும். பின்னர் சில நிமிடங்களிலோ அல்லது சில மணி நேரத்திலோ அல்லது சில நாட்களிலோ மனம் தன் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். 

மன அழுத்தம் இல்லாத வாழ்வை கற்பனை செய்தும் பார்க்க இயலாது. ஒரு அளவு வரை மன அழுத்தம் இருப்பது சீரான வளர்ச்சிக்கு தேவைப்படவும் கூடும். குறைவான அளவில் மன அழுத்தம் அல்லது பதட்டம் சில நேரங்களில் பயனுள்ளதாக அமைகிறது. உதாரணமாக  ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது ஏற்படும் அழுத்தம் காரணமாகஇ அந்த திட்டத்தை நாம் சிறப்பாக அதிக ஆற்றலுடன் அந்த வேலையை செய்வதற்கு வழிவகுக்கின்றது.

மன அழுத்தம் இரண்டு வகையானதாக இருக்கின்றது. நேர் அழுத்தம் ( Eustress – “Positive Stress”) என்பது சவால்கள் அல்லது அதிக பளு எனப் பொருள்படும். எதிர்மறை அழுத்தம் (Distress – “Negative Stress”) மன அழுத்தம் அதிகமாகும் போதும் சரியாக நிர்வகிக்கப்படாமல் இருக்கும்போது எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன. அழுத்தம் அதிகமானால் மனநோயை தூண்டி மன உளைச்சலையும் அதிகரிக்கச் செய்யும். ஒரு நபரின் மன அழுத்தம் தாங்கும் திறன் ஒன்று அல்லது பலவித காரணிகளால் ஏற்படுமாயின் நபருக்கு நபர் இத்திறன் வேறுபடுகின்றது. ஒரு நபரின் மன அழுத்தம் தாங்கும் திறன் கால கட்டங்களுக்கு தகுந்தவாறும் மாறுபடலாம். குழந்தைப் பருவங்களில் அவர்களுக்கு ஏற்படும் கொடுமைகளால் அழுத்தம் தாங்கும் திறன் பாதிக்கப்படலாம்.  ஏனையவர்களின் செயல்முறைகளினால் சிலர் மற்றவரை விட அதிகம் பாதிக்கப்படலாம். பரம்பரையாக வரும்  குறிப்பாக மூளையின் முக்கிய இரசாயனமான செரட்டினின் அளவோடு தொடர்புடைய தாமத செயற்பாட்டினால் ஏற்படலாம்இ நோய் எதிர்ப்புத் திறனில் வேறுபடுகள் உண்டாவதனால் (மூட்டு வலி, சொறி போன்ற குறைபாடுகளால் தாங்குதிறன் குறைகிறது) இதனாலும் ஏற்படலாம்இ சத்தில்லாத உணவு மற்றும் உடற் பயிற்சியற்ற வாழ்க்கை முறைகள் மூலமாக மன அழுத்தம் மாறுபடுகிறது. மேலும் ஏமாற்றங்களும்  பிரிவுகளும் இழப்புகளும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு ஆழமானதாக இருந்தால் மனம் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் சோகத்தில் தேங்கிவிடும். இந்தத் தேக்க நிலை,  அதாவது உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனதின் போராட்டம் மன அழுத்தத்தின் ஒருவகையாகும். இது மூளையில் சுரக்கும் இரசாணப் பொருட்களின் குறைபாட்டால் ஏற்படும் மற்றுமொரு மன அழுத்தத்தின் மாற்றமாகும்.

மன அழுத்தம் ஏற்படக் காரணங்கள் என்ன?

கூடுதலான குறைபாடுகள் மற்றும் பதட்டம் போன்றவை மன அழுத்தம் ஏற்பட ஒரு காரணமாக இருக்கிறது. அதாவது, சிக்கலான சமூக,  குடும்ப மற்றும் உயிரியல் காரணிகளால் உண்டாகும் பாலியல் தொல்லைகள்,  உடலியல் தொல்லைகள், மனோ ரீதியான தாக்கங்கள்,  குடும்பத்தில் வன்முறை,  தாக்குதல்கள்,  குழந்தைப் பருவ அல்லது இளம் பருவங்களில் ஏற்படும் கோளாறுகளும் மன நோய் ஏற்பட காரணமாகின்றன. பெரிய அதிர்ச்சியான சம்பவத்தினாலும் மன நோய் ஏற்படக்கூடும். இதற்கெதிரான தாங்குதிறன் சக்தி ஒவ்வொரு நபர்களைப் பொறுத்து மாறுகிறது. அதாவது பரம்பரை பாதிப்புகள், குணாதிசயங்கள் எண்ணங்கள்,  பிற அனுபவங்கள் ஆகியவை காரணமாக தாங்குதிறன் சக்தி ஒவ்வொரு நபருக்கும் வேறுபடுகிறது. மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை பேய் பிடித்துள்ளது என்று கருதி சமூகத்திலிருந்து விலக்கி வைக்கும் செயற்பாட்டில் முன்பு வாடிக்கையாக இருந்தது. அந்தக் காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இன்று மனநோய் குறித்த விழிப்புணர்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மன அழுத்தத்தால் பாதிப்புக்குள்ளானவர்கள் இன்றும் தவறாகவே புரிந்து கொள்ளப்படுகிறார்கள்.

நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்து சந்தோச்மாகவும்  உற்சாகமாகவும் இருக்குமாறு அவர்களுக்கு எளிதில் அறிவுரை வழங்கப்படுகிறது. அவர்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்ற முனைப்பில் அவர்களிடம் அதிக வேலைகள் சுமத்தப்படுகின்றன. அதனால் மூளையில் இருக்கும் லிம்பிக் அமைப்பு உடலின் செயல்பாடுகளையும்இ மனநிலையையும் கட்டுப்படுத்துகிறது. வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளுக்குப் பின் நமது மனநிலையை இந்த அமைப்பே சமப்படுத்துகிறது. நரம்புகளாலான லிம்பிக் அமைப்பில் செரடோனின்இ நொராடிரினலின் என்ற இரண்டு இரசாயனங்கள் தகவல்களைப் பரிமாறும் வேலையைச் செய்கின்றன. மன அழுத்தத்துக்கு உள்ளானவர்களுக்கு இந்த இரசாயனங்களின் சுரப்பு குறைவாக இருக்கும். இதன்படி பார்த்தால்  மன அழுத்தம் என்பது மனநோய் அல்ல அது உடலின் நோயாகும். இளகிய மனம் கொண்டவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகும்போது எளிதில் மனமுடைந்து மனச்சோர்வில் வீழ்ந்து விடுவார்கள். உறுதியான மனம் கொண்டவர்கள் அவ்வாறில்லாமல் தங்கள் முயற்சிகளின் அளவை இரு மடங்காக்கி அதில் வீழாமல் முற்றிலும் அதற்கெதிராக செயற்பட்டு மன அழுத்தத்தில் இருந்து வெளிவர முயல்கிறார்கள்’

நிதி நெருக்கடி,  தனிப்பட்ட இழப்புகள், உறவுகளின் பிரிவுகள், நீண்ட நாள் நோய்,  தாங்க முடியாத வலி,  போதைப் பொருள் பாவனை, கடந்த கால அதிர்ச்சிகள், அவமானங்கள் போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்படக்கூடும் என்பதை மருத்துவ உலகம் இன்று ஏற்றுக்கொண்டு உள்ளது. மேலும்,  அதீத மன அழுத்தமோ சிலவகை நோயோ நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை தேவைக்கு அதிகமாக இயங்கவைக்கும். அதன் காரணமாக மூளையில் வீக்கம் ஏற்படுவதனால் மன அழுத்தம் உண்டாகிறது. 

மன அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன? தூக்கமின்மை, பசியின்மை, கவனக்குறைவு, ஞாபகமறதி, சாதாரண இயல்புக்கு  மாறாக நடக்கும் தவறுகள், தாமதங்கள், கோபம், வன்முறையான அல்லது சமூகத்துக்கு எதிரான  நடவடிக்கைகள், உலவியல் ரீதியான வெளிப்பாடுகள் மது அல்லது போதைப்பொருள் பாவனை  படபடப்பான நடவடிக்கைகள் போன்றன மன அழுத்தத்தால் ஏற்படும் அறிகுறியாகும். மேலும்,  உடல் ரீதியான விளைவுகளாக பெரும்பாலும் நரம்பு,  சுரப்பிகள் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் தொடர்பாக வெளிப்படுகின்றன. எந்த வகை காரணியால் மன அழுத்தம் ஏற்பட்டாலும்  உடல் ஒரே மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. அதாவது,  படபடப்பு,  அதிகரிக்கும் இதய துடிப்பு,  மேலோட்டமான மூச்சு வாங்குதல்,  நடுக்கம், குளிர் அல்லது வியர்வை வெளியாதல்,  இறுக்கமான தசைகள், வயிற்றுப்பகுதி தசைகள் இறுகுதல், முறுக்கிய கைகள், பற்களை கடித்தல், வயிற்று உபாதைகள், அடிக்கடி சிறுநீர் கழித்தல், முடி கொட்டுதல் போன்றன உலவியல் ரீதியான அறிகுறியாகும். இதற்கு சரியான முறையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளாவிடின் தீர்க்கப்படாத உளவியல் பிரச்சினைகளுடன் மனநிலையையும் பிறகு உடல் நிலையையும் பாதிக்கக்கூடும். அதாவது, கவனம் செலுத்துவதில் சிரமம், முடிவெடுப்பதில் சிரமம்,  தன்னம்பிக்கை இழத்தல்,  அடக்கமுடியாத ஆசைகள், தேவையற்ற கவலைகள், படபடப்பு, அதீத பயம், பயத்தால் பாதிப்புகள், குணாதிசயத்தில் அடிக்கடி மாற்றங்கள் செயற்பாட்டு விளைவுகள் போன்றன அதன் அறிகுறியாக இருக்கும்.

அவர்களின் செயற்பாடுகள் எவ்வாறு காணப்படும்? மன அழுத்தத்தினால் பாதிக்கப்படவர்கள் சோகமாக  காணப்படுவார்கள் என்றோ, எந்த நேரமும் அழுவதற்குத் தயாராக இருப்பார்கள் என்றோ எண்ண வேண்டாம். வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் மீதான ஈடுபாட்டுக் குறைவே மன அழுத்தமாகும். மன அழுத்தத்துக்கு உள்ளானவர்கள் அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடுவார்கள்,  தூங்குவார்கள்,  சுத்தத்தை விட்டு விலகுவார்கள்இ நட்பைத் தவிர்த்து தனிமையை விரும்புவார்கள், வழக்கமான செயல்களில் நாட்டமின்றி இருப்பார்கள். மேலும்  ஒரு செயலைச் செய்வதற்கான ஆற்றல் குறைந்தவர்களாகவோ அல்லது ஆற்றல் இல்லாதவர்களாகவோ இருப்பார்கள்.  வழக்கத்துக்கு மாறாக அதீத மறதியுடன் ஒருவிதக் குழப்ப மனநிலையில் இருப்பார்கள்.  கோபமும் வருத்தமும் பயமும் மிகுந்து ஒருவித விளிம்பு நிலையில் அல்லது உணர்ச்சிகள் வெடித்துவிடும் நிலையில் இருப்பார்கள். தனக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்கும் எண்ணமும் அவர்களிடம் இருக்கும். நீண்டகால நோய்கள்,  பதற்றம், மனச்சிதைவு போன்ற உடல்நலப் பிரச்சினைகளோடு காணப்படுவார்கள். மேலும்  அதிகமாக புகைபிடித்தல்,  நரம்பியல் தூண்டல்கள், அதிகமாக மது அல்லது போதைப்பொருள் பாவித்தல், பற்களை கடித்தல்,  முடிகளை இழுத்தல், ஞாபக மறதி, விபத்துக்குள்ளாதல் முரட்டுத்தனமான வன்முறை செயல்களுக்கு தூண்டப்படுதல்,  தனிமை, வறுமை,  சோகம், அழுத்தம்  விலக்கி வைக்கப்படுதலால் ஏற்படும் விரக்தியில் இருத்தல் போன்ற செயற்பாடுகளில் காணப்படுவர்.

மன அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் தென்படுமா? ஆம், நிச்சயமாக சில நோய் அறிகுறிகள் தென்படும். அதாவது, வயிற்று நோய்கள், போதை பொருட்களுக்கு அடிமையாதல்,  மூச்சு, களைப்பு, படபடப்பு,  தலைவலி,  இரத்த அழுத்தம்,  தூக்கமின்மை,  வயிற்று ஜீரண கோளாறுகள்,  இருதய நோய்கள், மனநிலை பாதிப்பு, உடலுறவில் விருப்பம் இன்மை,  சொரியாசிஸ்,  படை  அரிப்பு, உணர்ச்சியற்ற தோல்,தோல் வியாதிகள்  உலவியல் நோய்கள் அதன் அறிகுறிகளாக தென்படும்.

ஆண்களைவிட பெண்கள் அதிகளவில் பாதிப்புள்ளாகிறார்களே அதற்கான காரணம் என்ன? ஆண்களை விட பெண்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகக் காரணம், வீட்டில் தனிமையாக இருத்தல்,  வெளிச் சமூகத்தோடு தொடர்புகளை குறைவாக வைத்திருத்தல்,  பெண்களின் உடலில் ஏற்படும் கோமோன் மாற்றங்கள்,  குடும்ப வன்முறைகளுக்கு இலக்காதல்,  சமூக விழிமியங்களை பாதுகாக்கும் நோக்கில் சில விடயங்களை வெளியில் சொல்ல முடியாமல் தங்களுக்குள்ளேயே மறைத்து வைத்தல்  போன்ற காரணங்களினாலேயே அவர்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

இப்பாதிப்பிலிருந்து பெண்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் உண்டா? ஆமாம், பெண்களுக்கு சமூகத்துடன் பழகுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுத்தல்,  அவர்களின் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை வழங்குதல், வீட்டிலுள்ளவர்கள் அதாவது குடும்பத்திலுள்ளவர்கள் பெண்களின் மனநிலையை புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவாக நடந்துகொள்ளல்,  உளவளத்துணை தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அதனை இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தல்,  குடும்ப வன்முறைகளை தடுப்பதற்கான பொறிமுறைகளை சட்ட ரீதியாகவும்  சமூக ரீதியாகவும் ஏற்படுத்திக்கொடுத்தல் போன்ற வழிமுறைகளை செய்வதன் மூலம் இப்பாதிப்பிலிருந்து பெண்களை நாம் பாதுகாத்துக்கொள்ளலாம். 

மன அழுத்தத்தின் நிலைமை எவ்வாறு காணப்படுகிறது? உலகளவில், மனிதர்களிடமுள்ள குறைபாட்டில் மன அழுத்தமே முதலிடத்தில் உள்ளது. மன அழுத்தத்துக்கு நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன. இருப்பினும்  உலகில் மன அழுத்தம் குறைந்தபாடில்லை. மனிதர்களின் மீதான அதன் பிடி இறுகிக்கொண்டே இருக்கிறது. மன அழுத்த நோய்க்கான சிகிச்சைக்குப் பின்னும் நோயாளிகள் முழுவதும் குணமடைவது இல்லை என்பதாலேயே இந்நோய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் மன அழுத்தமும் தனிமையும் இந்த நோயின் உயர்வுக்கான முக்கிய காரணமாகும். 60 தொடக்கம் 74 வயதுடையவர்கள் மற்றைய வயதினரைவிட மன அழுத்தத்தால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். உலகில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் இந்த நோய் அதிகரித்து வருகிறது எனக்கூகூறலாம். உலகில் ஒரு நிமிடத்துக்கு இருவர் இதனால் உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதில் 15 வயதுக்கும் 29 வயதுக்கும் உட்பட்டவர்களாகும். தற்கொலைக்கும் மன அழுத்தத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. தற்கொலை மரணத்துக்கான காரணங்களில் பத்தாவது இடத்தில் மன அழுத்தம் உள்ளது.

உலகில் மன அழுத்தத்தின் நிலை எவ்வாறு காணப்படுகிறது? மன அழுத்தத்தைப் பொறுத்தவரை, அமெரிக்கா அதிக மன அழுத்தமுள்ள மனிதர்களைக் கொண்ட நாடாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கொலம்பியா, உக்ரைன்,  நெதர்லாந்து,  பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. ஜப்பான்,  நைஜீரியா, சீனா ஆகிய நாடுகளில் மன அழுத்த பாதிப்பு குறைந்தளவில் உள்ளது. குறிப்பாக சொல்லப் போனால், கீழத்தைய நாடுகளில் குறைவாகவும்  மேலத்தைய நாடுகளில் அதிகமாகவும் மன அழுத்தத்தின் தாக்கம் இருப்பதால் அது மேலத்தைய நாடுகளின் பிரச்சினை என்றோ ஆடம்பரத்தின் வெளிப்பாடு என்றோ சிலரால் கருதப்படுகிறது. ஆனால்,  உண்மை அதுவல்ல. பணக்காரருக்கு மன அழுத்தம் இருக்கும்.  ஏழைக்கு மன அழுத்தம் இருக்காது என்றில்லை. பெரும்பாலான நாடுகளில் மன அழுத்தம் ஒரே அளவில்தான் உள்ளது என மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.   வளர்ச்சியடையாத நாடுகளில்,  மன அழுத்தம் குறித்த தரவுகளைச் சேகரிக்கும் கட்டமைப்பு இருப்பதில்லை. அங்கு வாழும் மக்களுக்கு மன அழுத்தத்தை ஒரு குறைபாடாகக் கருதும் மனமுதிர்ச்சி இருப்பதில்லை. தங்கள் உணர்வுகளையும் எண்ண ஓட்டங்களையும் வெளிப்படையாகப் பேசினால்  சமூகத்தில் தங்களுக்குக் களங்கம் ஏற்படும் என்று அஞ்சி  வெளியில் உதவி பெறத் தயங்கி,  அவர்கள் தங்கள் குறைபாட்டை தங்களுக்குள்ளேயே புதைத்துக்கொள்பவர்களாக உள்ளனர். இவற்றின் காரணமாகவே, வளர்ச்சியடையாத நாடுகளில்,  மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவாக இருப்பதாக உள்ளது.

ஒரு நபரின் மன அழுத்த நிலையை அட்ரீனல் சுரப்பி சுரக்கும் இரண்டு இரசாயனங்களான கார்டிசோல் (Cortisol) ) மற்றும் னுர்நுயு (Dehydroepiandrosterone)  ஆகியவற்றை அளப்பதன் மூலம் அறியலாம்.

அவர்களுக்கான சிகிச்சை எவ்வாறு வழங்கப்படுகின்றன? உடலின் இரசாயனக் குறைப்பாட்டால் வரும் மன அழுத்தத்தைத் தீவிர மன அழுத்தம் என்றும்  வாழ்வின் நிகழ்வுகளால் ஏற்படும் மன அழுத்தத்தை மிதமான மன அழுத்தம் என்றும் கூறுகிறோம். இதற்கான சிகிச்சைகள் எவ்வாறு அமையும் என்றால்இ தீவிர மன அழுத்தத்துக்கு, இருவகை அழுத்தம் குறைக்கும் (Anti Depressant) ) மருந்துகள் உள்ளன. ஒரு வகை மருந்து  நோயுற்றவரின் பரபரப்பைக் கட்டுப்படுத்தி அவரை அமைதிப்படுத்தும். இரண்டாவது வகை மருந்து சோர்வையும் அசதியையும் நீக்கி சுறுசுறுப்பை அதிகரிக்கும். தற்கொலை எண்ணங்களோ முயற்சிகளோ அதிகமாக இருக்குமேயானால்  அப்போது நோயுற்றவர்களை மருத்துவமனையில் சேர்த்துக் கண்காணிக்க வேண்டும். எவ்வளவு காலம் மருந்து உட்கொள்ளவேண்டும் என்பதை வைத்தியரே தீர்மானிப்பார். மேலும் தீவிர மனநோயால் பாதிக்கப்பட்டவருக்கு  ஆரம்ப கட்டங்களில் மன ஆலோசனை பயனளிக்காது. ஆனால்,   அவர்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்த ஆலோசனை அவர்களின் குடும்பத்தினருக்கே உள்ளது. மன அழுத்தத்தின் அறிகுறிகள் வந்த பிறகே மன ஆலோசனை நோயாளிகளுக்கு கைகொடுக்கும். அதிகமான மன அழுத்தத்துக்கு மன ஆலோசனை மிகவும் முக்கியம். அதனால் ஏற்படும் உறக்கமின்மை,  பதற்றம் ஆகிய இரண்டையும் குறைப்பதற்காக ஆரம்பக் கட்டங்களில் மாத்திரைகள் தேவைப்படும். தூக்கம் இயல்பான நிலைக்குத் திரும்பிவிட்டால் மாத்திரைகளை நிறுத்திவிடலாம்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top