ஆன்மீகம்

இவ் வார இராசிப் பலன் உங்களுக்கு எப்படி? ஜூலை 20 முதல் 26ம் திகதி வரை

இந்த வாரம் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆடி சிவராத்திரி, ஆடி அமாவாசை , கந்த சஷ்டி என பல நல்ல நாட்கள் வருகின்றன. இந்நிலையில் கிரகங்களின் அமைப்பின் படி ஒவ்வொரு ராசிக்கும் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்…

​மேஷம் : சிறிய இடையூறுகள் ஏற்படலாம் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையால் இந்த வாரம் பயனுள்ளதாக இருக்கும். மூத்தவர்கள் குடும்ப உறுப்பினர் அல்லது உறவினரின் ஆலோசனையால் நீங்கள் பயனடைவீர்கள், உங்கள் வருவாய் அதிகரிக்கும். புதிய வருமான வாய்ப்புகள் இருக்கும். இந்த வாரம், ஒருவித மன உளைச்சல் உங்களைத் தொந்தரவு செய்யலாம். குறுகிய கால முதலீடு பயனளிக்கும். சிறிய இடையூறுகள் ஏற்படலாம். உடலின் கீழ் பகுதியில், தசை புண் ஏற்படலாம். . நீங்கள் எதிர் பாலினத்தவரின் ஆதரவைப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம் – அடர் மஞ்சள் அதிர்ஷ்ட எண் – 3,9

​ரிஷபம் : இசையில் ஆர்வம் உருவாக்கும் இது உங்களுக்கு ஒரு சிறந்த வாரமாக இருக்கும். உங்கள் திறமையால் பல வகை நன்மைகளைப் பெறுவீர்கள். ஆன்மீகம் உங்களுக்கு மன அமைதியைக் கொடுக்கும். இசையில் ஆர்வம் உருவாகும். நீங்கள் சத்தியத்தின் பாதையில் நடந்து திருப்தி பெறுவீர்கள். ஆன்மிகம் மற்றும் வேதங்கள் மீதான உங்கள் பக்தி அதிகரிக்கும், புகழ் அதிகரிக்கும். தன வரவு மிதமானதாக இருக்கும். செலவு காரணமாக மனம் கலங்கக்கூடும். வேறு மாநில நபர்களிடமிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதன்கிழமை முதல் மன அழுத்தம் இருக்கலாம். சிறிய விஷயங்கள் உங்கள் மனதை வருத்தப்படுத்தும். குடும்ப மகிழ்ச்சியும் அமைதியும் சாதாரணமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை அதிர்ஷ்ட எண் – 6

​மிதுனம் : செலவு அதிகரிக்கும் வாரத்தின் தொடக்கத்தில் மன கவலை ஏற்படலாம். எதிர்ப்பாளர்கள் உங்கள் மீது களங்கம் கற்பிக்க பார்ப்பார்கள், ஆனால் வெற்றி பெற மாட்டார்கள். செலவினங்களை அதிகரிப்பதால் மன குழப்பம் ஏற்படும். ஆனால் பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். புதிய முதலீடுகள் இழப்பை தரலாம். அதனால் எந்த வேலையும் கவனமாக செய்யுங்கள். உடல்நலம் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். குடும்பத்தின் சூழ்நிலையும் மகிழ்ச்சியாக இருக்கும். எந்த ஒரு செயலையும் அவசர அவசரமாக செய்வதை தவிர்க்கவும். அதிர்ஷ்ட நிறம் – அடர் பச்சை அதிர்ஷ்ட எண் – 1,5

​கடகம் : நண்பர்கள் உதவுவார்கள் புதிய ஒப்பந்தங்கள் பயனளிப்பதாக இருக்கும். இந்த வாரம் தொழில், வியாபாரம் உயர்வதற்கான நல்ல காலம். நண்பர்கள் உதவுவார்கள். வாழ்க்கை துணை, மற்றும் சக ஊழியர்களிடமிருந்து முழு ஆதரவு இருக்கும். எதிரிகளின் செயல் பதற்றத்தையும் ஏற்படுத்தும். சனியின் அமைப்பு உங்கள் ராசிக்கு மன குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். உங்களின் திறமை முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். உயர் அதிகாரிகள் பாராட்டு கிடைக்க வாய்ப்புள்ளது. அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள் அதிர்ஷ்ட எண் – 1,2

​சிம்மம்: அரசு ஆதரவு கிடைக்கும்
நேர்மறையான அணுகுமுறையே லாபத்திற்கு காரணமாக இருக்கும். அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இருக்கும். உத்தியோகஸ்தர்கள் கூடுதல் பொறுப்பு பெற வாய்ப்புள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்களின் நெருக்கம் அதிகரிக்கும். கருணை உணர்வு அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குடும்ப ஆரோக்கியம் பாதிக்கப்படும். உங்கள் பணி திறன் அதிகரிக்கும். ஒருவரின் சரியான ஆலோசனை அற்புதமான பலனை தருவதாக இருக்கும். வார இறுதியில் வேலையில் இடையூறுகளும் ஏமாற்றமும் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம் – குங்குமப்பூ அதிர்ஷ்ட எண் – 1,3

​கன்னி : ஆன்மீக ஆர்வம் அதிகரிக்கும். தேவையற்ற மனக் கவலைகள் ஏற்படலாம். எதிரிகள் பதற்றத்தை உருவாக்குவார்கள். எதிலும் சற்று எச்சரிக்கையாக இருங்கள். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். வயிறு மற்றும் சுவாசம் பிரச்னை ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம் – பச்சை, பழுப்பு அதிர்ஷ்ட எண் – 5

​துலாம் : முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தரும் இந்த வாரம் முயற்சிகள் வெற்றி பெறும். உங்கள் விருப்பங்கள் கைகூடும். சகோதரரின் முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருப்திகரமான வருவாய் காரணமாக, குடும்பத்தில் நல்லிணக்கமும் மரியாதையும் இருக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் சில பாதகமான சூழ்நிலைகள் இருக்கும், ஆனால் நீங்கள் அவற்றை எளிதாக சமாளிப்பீர்கள். அதிகாரிகளுடனான உறவு வலுப்பெறும். அரசியலில் உள்ளவர்களுக்கு சாதகமற்ற சூழல் நிலவலாம். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனை முக்கியம். அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை அதிர்ஷ்ட எண் – 6

​விருச்சிகம் : செலவு செய்வதில் கவனம் தேவை உங்கள் ராசி மீது சுக்கிரனின் நேரடி பார்வை விழுவதால் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். உடல் நலம் அதிகரிக்கும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நடவடிக்கையில் கவனம் தேவை. சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

வழக்கு அல்லது தகராறில் எதிர்மறையான சூழ்நிலைகள் உள்ளதால், அமைதியை கடைப்பிடிக்கவும். துணையுடன் மன கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் அனுசரித்துச் செல்லவும். வாரத்தின் நடுப்பகுதியில், சிலரின் செயல் காயப்படுத்தும். கோபத்தையும் கட்டுப்படுத்துங்கள். குழந்தைகளின் ஆரோக்கிய குறைபாடு மன அழுத்தத்தை உருவாக்கும். எந்தவொரு முயற்சியிலும் வெற்றி இல்லாததால் அசெளகரியம் ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம் – காவி அதிர்ஷ்ட எண் – 9

​தனுசு : குடும்பத்தினருடன் கோபம் வேண்டாம் நேரம் சாதகமானதாக அமையும். ஆனால் லாபத்திற்கான முயற்சிகள் அவசியம். உங்கள் திறமை காரணமாக பாராட்டு பெறுவீர்கள், நற்பெயர் அதிகரிக்கும். சில சவால்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். உடல்நலம் கவலையளிக்கும். குடும்பத்தினருடன் கோபப்பட வேண்டாம், அது குடும்ப அமைதியை குலைக்கும். எதிரிகள் வலுப்பெறுவார்கள், ஆனால் உங்கள் தந்திரத்தால் அவர்களைத் தோற்கடிக்க முடியும். சட்ட விஷயங்களில் விழிப்புடன் இருங்கள். மோதல்களிலிருந்து விலகி இருப்பது நல்லது. மூட்டு மற்றும் தசை வலி இருக்கும். நல்ல நிறம்- மஞ்சள் அதிர்ஷ்ட எண் – 3,9

​மகரம் : அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் இந்த வாரம் உங்கள் திறமை மேம்படும். உங்கள் இலக்கை அடைவீர்கள். அதனால் அதிகாரிகளிடமிருந்து பாராட்டுகள் பெற வாய்ப்புக்கள் உண்டு. வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் இருக்கும். நிதி உதவி கிடைக்கும். பங்குதாரர்களுடன் மன கசப்பு உண்டாகலாம். பேச்சில் கவனக்குறைவு சிக்கலான சூழ்நிலைகளை உருவாக்கும். எல்லா முரண்பாடுகளும் இருந்தபோதிலும், இலாபத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். சில தவறான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். அதனால் மதிப்பு, மரியாதை கிடைக்காமல் போகலாம். அதிர்ஷ்ட நிறம் – அடர் நீலம் அதிர்ஷ்ட எண் – 4,8

​கும்பம் : தேவையற்ற குழப்பத்தைத் தவிர்க்கவும் வியாபாரம், தொழிலில் மிதமான முன்னேற்றம், லாபம் இருக்கும். எதிர்மறை எண்ணங்கள் துயரத்தை ஏற்படுத்தும். தேவையற்ற குழப்பத்தைத் தவிர்க்கவும். போட்டி மனப்பான்மை முடிவுக்கு வரும். நிச்சயமற்ற தன்மையால் மனம் அமைதியற்றதாக இருக்கும். பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கலத்தை நீங்கள் உணர்வீர்கள். மாமியாருடன் மோசமான உறவுகள் மேம்படும். நல்ல நிறங்கள் – வானம் நல்ல எண்கள் – 6, 7

​மீனம்: கடன் திருப்பி செலுத்த வாய்ப்புள்ளது ராசியில் செவ்வாய் கிரகம் இருப்பது முதுகுவலியைக் கொடுக்கும். பேச்சில் புத்திசாலித்தனம் தெரியும். எதிர்மறை எண்ணங்கள் சிக்கலை ஏற்படுத்தும். கடன்களை திருப்பித் தர நல்ல சூழல் உருவாகும். கடின உழைப்பு உங்களுக்கு பயனளிக்கும். நெருங்கிய ஒருவரின் நடத்தை உங்கள் மனதை புண்படுத்தும். எதிரிகள் சிக்கலை தருவார்கள். அதனால் எதிலும் தேவையற்ற விவாதத்தை தவிர்க்கவும். வார இறுதியில் எல்லா குழப்பத்திற்கும் ஒரு முடிவு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம் – தங்க நிறம் அதிர்ஷ்ட எண் – 3,9

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top