உள்நாட்டு செய்திகள்

கல்முனையின் சில பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை – தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு

(யு.எம்.இஸ்ஹாக்) கல்முனை பிராந்தியத்தில் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வரையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக கல்முனை பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 11 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக கல்முனை செய்லான வீதி தொடங்கி வாடி வீட்டு வரையிலான தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் உள்ளடங்கலாக கல்முனை பொதுச் சந்தை உட்பட பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்ட பிரதேசமாக கல்முனை பொலிஸாரினால் முடக்கப்பட்டுள்ளது. இன்று கல்முனை பொதுச் சந்தை, கல்முனை பஸார், கல்முனை பிரதான வீதியில் உள்ள வர்த்தகர்களுக்கு மேற்கொண்ட அண்டிஜன் பரிசோதனையில் 32 பேர் கொரோனா தொற்றாளர்களாக இணங்காணப்பட்டதை தொடர்ந்து மேலும் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும், தொற்றாளர்களை இனங்காண்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top