உள்நாட்டு செய்திகள்

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் விலை போய்விட்டோம் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பரபரப்புக் குற்றச்சாட்டு

2011-ம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி விலை போய்விட்டது. மேட்ச் பிக்ஸிங் நடந்துள்ளது என்று இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தாநந்தா அலுத்காமகே பரபரப்புக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 2011-ம் ஆண்டு ஐசிசி ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பைப் போட்டிக்கான இறுதி ஆட்டம் மும்பையில் நடந்தது. இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், இலங்கை அணியும் மோதின. கபில் தேவ் தலைமையில் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்றிருந்த இந்திய அணி, 2-வது முறையாக தோனி தலைமையில் உலகக் கோப்பையை வென்றது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. ஜெயவர்த்தனா சதம் அடித்து ஆட்டமிழந்தார்.

Indian captain Mahendra Singh Dhoni (L) hits a six to win against Sri Lanka as teammate Yuvraj Singh reacts during the Cricket World Cup 2011 final at The Wankhede Stadium in Mumbai on April 2, 2011. India beat Sri Lanka by six wickets. AFP PHOTO/Indranil MUKHERJEE (Photo credit should read INDRANIL MUKHERJEE/AFP/Getty Images)


அடுத்து 275 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இந்தியர்கள் அனைவரையும் பெருமைப்பட வைத்த அந்த நாளை யாரும் மறக்க முடியாது. இந்திய அணி லீக் ஆட்டம் முதற்கொண்டு சிறப்பாக ஆடி காலிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடையும் சூழலி்ல யுவராஜ் சிங்கால் வெற்றி பெற்றது. அரையிறுதியில் பாகிஸ்தானை துவம்சம் செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் கவுதம் கம்பீர் அடித்த 97 ரன்களும், கேப்டன் தோனி அடித்த 91 ரன்களும் வெற்றிக்கு வித்திட்டு, கோப்பையை வெல்லக் காரணமாக அமைந்தன. ஆனால் அந்த போட்டியில் பிக்ஸிங் செய்யப்பட்டது, இலங்கை அணி விலைபோய்விட்டது என்று முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தாநந்தா அலுத்காமகே குற்றம் சாட்டியுள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top