உலகம்

உலகின் பல பகுதிகளிலும் இனவாத எதிர்ப்பு பேரணிகள்

அமெரிக்காவில் இடம்பெற்று வரும் இனவாத எதிர்ப்புக்கு ஆதரவாக உலகின் பல பகுதிகளிலும் தொடர்ந்து பேரணிகள் இடம்பெற்று வருகின்றன. இதில் ஐரோப்பாவின் பல நகரங்களில் பேரணிகள் இடம்பெற்றதோடு, பிரான்சின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இதில் பாரிஸ் மற்றும் லியோன் நகரங்களில் மோதல்கள் வெடித்தன.

இனச் சமத்துவத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிர்ப்பு வெளியிட்டு லண்டன் நகரில் தீவிர வலதுசாரிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டங்களைக் கண்டித்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பிரிட்டனில் இனவாதத்திற்கு இடமே இல்லை என்றார். பிரான்ஸ் தலைநகரில் கற்களை வீசி எறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டனர். பாரிஸில் இனவாத எதிர்ப்புப் போராட்டத்தில் சுமார் 15,000க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top