உலகம்

உலகின் 30 நாடுகளில் தென்படுகின்ற வியக்க வைக்கும் மர்ம தூண் இந்தியாவிலும் தென்பட்டது!

உலகின் 30 நாடுகளில் தென்பட்டதை போன்ற மர்ம உலோகத் தூண், தற்போது இந்தியாவிலும் தென்பட்டுள்ளது. குறித்த தூண் குஜராத் மாநிலத்தில் தென்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அந்த தூண்கள் அடுத்தடுத்து தென்பட்டதுடன், திடீரென மாயமாகின. அதேபோன்ற தூண், அகமதபாத்தில் மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனமான சிம்பொனியால் பராமரிக்கப்படும் தோட்டத்தில் தென்பட்டுள்ளது. ஆனால் மற்ற நாடுகளில் மாயமானது போல அத்தூண் மாயமாகாமல் அப்படியே உள்ளது. அதில் சிம்பொனி நிறுவனத்தால் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதில் சில எண்களும் பதிவிடப்பட்டுள்ளன. இருப்பினும் தூணை தாங்கள்தான் வைத்திருப்பதாக சிம்பொனி நிறுவனம் ஒப்பு கொள்ளவில்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top