உலகம்

ஊரடங்கு அமலில் இருந்த 8 மாதங்களில் அதிகம் விற்பனையானது எது தெரியுமா?

கொரோனாவால் நாடு முழுவதும் 8 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த கால கட்டத்தில் மக்களின் இயல்பான வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள், உணவுகள், வாழ்க்கையின் அன்றாட நடைமுறைகள் அனைத்திலும் மாற்றங்கள் தென்பட்டன. இது தொடர்பாக பொருட்கள் வினியோக வலைதளமான ‘டன்சோ’ ஒரு ஆய்வை மேற்கொண்டது. ஊரடங்கு கால கட்டத்தில் மக்கள் எந்தெந்த பொருட்களை அதிகம் வாங்கினார்கள், என்ன வகை உணவுகளை அதிகம் சாப்பிட்டார்கள் என்று இந்த ஆய்வு நடத்தப்பட்டது

அதில் ஊரடங்கு அமலில் இருந்த 8 மாத கால கட்டத்தில் ஆணுறை விற்பனை பல மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்தது. இரவை விட பகல் நேரத்திலேயே அதிக அளவில் ஆணுறைகளை ஆர்டர் செய்து வாங்கினார்கள். இரவை ஒப்பிடும் போது பகலில் வழக்கத்தை விட 3 மடங்கு அதன் விற்பனை அதிகரித்து இருந்தது. ஆணுறையை ஐதராபாத் மக்கள்தான் மிக அதிகமாக பயன்படுத்தினார்கள். அங்கு இதன் விற்பனை 6 மடங்கு அதிகரித்து இருந்தது. இதில் சென்னை 2-வது இடத்தை பெற்றது. இங்கு இதன் விற்பனை 5 மடங்கு அதிகரித்து இருந்தது. இதே போல ஜெய்ப்பூரில் 4 மடங்கும், மும்பை, பெங்களூரில் 3 மடங்கும் அதிகரித்து இருந்தன. இத்துடன் கருத்தடை மருந்து, மாத்திரைகளும் ஊரடங்கு கால கட்டத்தில் மிக அதிகமாக விற்பனை ஆயின. குறிப்பாக பெங்களூர், புனே, குர்கான், ஐதராபாத், டெல்லி ஆகிய நகரங்களில் இதன் விற்பனை அதிகமாக இருந்தது.

இத்துடன் கர்ப்பம் ஆனதை கண்டுபிடிக்கும் கர்ப்ப பரிசோதனை சாதனங்களும் அதிக அளவில் விற்பனை ஆனது. பலர் ஊரடங்கு காலத்தை நன்றாக சாப்பிடுவதற்கு பயன்படுத்தி கொண்டனர். வித, விதமான உணவுகளை ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டார்கள். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகை உணவுகள் அதிகமாக விற்றுள்ளன. பெங்களூரில் சிக்கன் பிரியாணியை அதிக அளவில் வாங்கி சாப்பிட்டுள்ளனர். மும்பையில் டால்கிச்சடி, சென்னையில் இட்லி, குர்கானில் ஆலு டிக்கி பர்க்கர் ஆகியவை அதிகமாக விற்று இருக்கின்றன. டெல்லி, சென்னை, ஜெய்ப்பூர் நகரங்களில் டீயை விட காப்பியை அதிக அளவில் வாங்கி சாப்பிட்டு உள்ளனர். மேலும் கொரோனாவுக்கு பயந்து மக்கள் ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிட்டுள்ளனர். ஐதராபாத், சென்னை, பெங்களூர், மும்பை போன்ற நகரங்களில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை அதிகமாக வாங்கி உள்ளனர். புனேயில் பிரவுண் பிரெட் அதிகம் விற்றுள்ளது. மும்பையில் புரக்கோலி, வெண்ணை அதிகம் விற்பனையாகி உள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top