ஐக்கியதேசிய கட்சியின் தலைமையை நிபந்தனைகள் இன்றி சஜித்துக்கு வழங்கினால் அந்த கட்சியுடன் இணைந்து செயற்படதயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை காரணமாக பல்வேறுபட்ட கருத்துக்களை கொண்ட சக்திகளை ஐக்கியப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டு கட்சியை மறுசீரமைப்பு செய்வதற்கு காலஅவகாசம் தேவையென்றால் ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய தேசிய கட்சியின் இணைந்த கட்சியாக செயற்படமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் தெரிவித்துள்ள செய்தியை ஐக்கியதேசிய கட்சி புரிந்துகொள்ளவேண்டும், ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்த உதவவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
