உள்நாட்டு செய்திகள்

ஐலண்ட் பத்திரிகையின் மூத்த ஊடகவியலாளர் சடலமாக மீட்பு!!

ஐலண்ட் பத்திரிகையின் மூத்த ஊடகவியலாளர் Zakki Jabbar அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பின் புறநகர்ப்பகுதியான பெலவத்தையில் வசித்து வந்த அவர் உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களாக காணாமல் இருந்த அவர் நேற்று அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தனியாக வசிக்கும் Zakki Jabbar பல நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அவரின் உறவினரொருவர் மூடப்பட்டிருந்த அவரது இல்லத்தை திறந்து பார்த்த போதே Zakki Jabbar உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தமைக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை. எனினும், அவர் உயிரிழந்து பல நாட்களாகியிருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top