உள்நாட்டு செய்திகள்

கடத்தப்பட்ட தேரர் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு! பெண் உட்பட நால்வர் கைது

கொஸ்வத்த, கொடிகந்த விகாரையில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட தேரரின் சடலம் மயானம் ஒன்றில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 65 வயதுடைய உடவில தம்மசிறி தேரர் கடந்த 2 ஆம் திகதி குழு ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினம் கொட்டதெனிய மயானத்தில் இருந்து அவருடைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுள் குறித்த விகாரையில் உள்ள இளம் பிக்கு ஒருவரின் தாய் மற்றும் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top