உள்நாட்டு செய்திகள்

கண்டி பிரதான வீதியில் பயணித்த ஒருவருக்கு 90,000 ரூபா தண்டப் பணம்

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு 90,000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இந்த நபர் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளார். கடவத்தை – ரம்முத்துகல பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவருக்கே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு 4 குற்றச்சாட்டுக்களின் கீழ், கம்பஹா மேலதிக நீதவான் இந்த தண்டப் பணத்தை விதித்துள்ளார். மோட்டார் சைக்கிளில் மாற்றத்தை ஏற்படுத்தியமை, இலக்கத்தகடு இல்லாமை, செலுப்படியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமை மற்றும் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top