உலகம்

கனடாவில் துயரம் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

கனடாவின் மேற்கு மாகாணமான ஆல்பர்ட்டாவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிராண்டே ப்ரைரி நகரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில், ராபின்சன் ஆர் 44 என்ற ஹெலிகொப்டர் நேற்று விபத்துக்குள்ளாகியது. விபத்தில் இரு பெரியவர்களும், இரு குழந்தைகளும் உயிரிழந்திருப்பதாகவும் அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந் நிலையில் கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இருவர் அடங்கிய குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top