ஆரோக்கியம்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் மார்பக புற்றுநோயினை இனங்காண்பதற்கான மருத்துவ சிகிச்சை பிரிவு ஆரம்பம்

கிழக்கு மாகாணத்திலுள்ள நான்கு வைத்தியசாலைகளில் மார்பகப் புற்று நோயினை இனங்காண்பதற்கான சிகிச்சை (Screening) ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்டையில் கல்முனை பிராந்தியத்தில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை இச் சிகிச்சையினை வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை இப் பிராந்திய மக்களுக்கு நன்மை பயக்க கூடிய விடயமாகக் காணப்படுகிறது.

நோய் அறிகுறிகள் தென்படும் பெண்கள் அல்லது 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் இச் சிகிச்சை மூலம் தங்களை பரிசோதித்துக் கொள்ள முடியும் என்பதுடன் இச் சிகிச்சையானது 11.12.2020 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


இச் சிகிச்சையானது நோயினுடைய தன்மை மற்றும் அறிகுறிகளுக்கு ஏற்ப வைத்திய பரிசோதனை (Clinical Assessment), உருவப்படுத்தல் (Imagery), நோயியல் (Pathology) என மூன்று பரிசோதனைக்களாக (Triple  Assessment) நடாத்தப்படுகின்றது. 2018 தரவுகளின் படி இலங்கையில் உள்ள பெண்களில் இனங்காணப்பட்ட புற்று நோய்களில் 24 வீதமானோர் மார்பக புற்று நோயாளர்களாகவும் ஆண்டிற்கு 3000 தொடக்கம் 3500 பெண்கள் இப் புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளார்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நோயை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சைகளை ஆரம்பிப்பதனால், பாரதூரமான விளைவுகளைத் தவிர்த்துக்கொள்ள முடியும். எனவே 35 வயதிற்கு மேற்பட்டவர்கள், அல்லது நோய் அறிகுறிகள் தென்படும் பெண்கள்  அனைவரும் இச் சிகிச்சை முறையின் மூலம் பரிசோதிக்கலாம் என கல்முனை ஆதார வைத்தியசாலையின் சுகாதார கல்விப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் சோமசூரியம் திருமால் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top