உள்நாட்டு செய்திகள்

காணமல் போன இந்தோனேசிய விமானத்தின் பாகங்கள் மீட்பு

காணமல் போன இந்தோனேசிய விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் கூறுகள் கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேஷியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று ரேடாரில் இருந்து மறைந்து விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து விமானம் மறைந்ததாகவும் தரைக்கட்டுப்பாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்த நிலையில் காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீவிஜயா ஏர் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-500 என்ற ரகத்தை சேர்ந்தது. உள்நாட்டிற்குள்ளேயே ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்துக்கு இந்த விமானம் பயணம் செய்ததாகவும் தகவல் தெரிய வந்திருக்கிறது. தற்போது மாயமாகியுள்ள பயணிகள் விமானத்தை தேடும் பணியில் அரசும் அதிகாரிகளும் இறங்கியுள்ளனர். அந்த விமானத்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top