உள்நாட்டு செய்திகள்

காத்தான்குடியில் கர்ப்பிணிப் பெண் உட்பட இருவருக்கு கொரோனா

மட்டக்களப்பு காத்தான்குடியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கர்ப்பிணிப் பெண் உட்பட இருவருக்கு கொரோனா இன்று காலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளான ஆரையம்பதி ஒல்லிக்குளத்தை சேர்ந்த பெண்ணொருவருடன் கொழும்பிலிருந்து தனியார் பஸ் வண்டியொன்றில் காத்தான்குடிக்கு வருகை தந்து தனிமைப்படுத்தலில் இருந்த கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கும் கொழும்பிலிருந்து காத்தான்குடிக்கு வந்த மற்றொரு நபருக்குமாக இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து வந்த நிலையில் நேற்று இவர்களுக்கு மேற் கொண்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த கர்ப்பிணிப் பெண்ணுடைய கணவருக்கும் பி.சி.ஆர் மேற் கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top