அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் சம்மாந்துறை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு பொதுச் சந்தைக்கு முன்னால் வான் தடம் புரண்டதில் ஐவர் காயமடைந்துள்ளதுடன் வான் பலத்த சேதம் அடைந்துள்ளது


நிந்தவூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான வானே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சம்மாந்துறை பொலீஸார் தெரிவித்துள்ளனர்
நிந்தவூரில் உள்ள குறித்த நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சமயமே இந்த விபத்து சம்பவித்துள்ளது
இதன் போது காயமடைந்த ஐவர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஆகியனவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்

