உள்நாட்டு செய்திகள்

கிழக்கிலும் ஒரு கொத்தணியா??அதிகரிக்கும் தொற்றாளர்கள்!

கல்முனை பிராந்தியத்தில் தற்போது வரை 32 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் சகல பொதுச்சந்தைகள் மற்றும் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக கல்முனை தகவல்கள் தெரிவிக்கின்றன்.


அக்கரைப்பற்று சந்தையிலுள்ள கடை உரிமையாளர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறித்த பிசிஆர் பரிசோதனை நேற்று எழுமாறாக மேற்கொள்ளப்பட்டிருந்து.இதில் 31 பேர் அக்கரைப்பற்று பகுதியிலும் ஒருவர் சாய்ந்தமருதிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


அத்துடன் அக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்கள் இன்றில் இருந்து (26) மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது

இன்றும் அக்கரைப்பற்று பிரதேசத்தில் 50பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரிவுகளில் இன்று மாலை 6 மணி தொடக்கம் மறு அறிவித்தல்வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top