உள்நாட்டு செய்திகள்

கிழக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1500ஐ கடந்தது

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின்  எண்ணிக்கை 1500ஐ கடந்துள்ளது. அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் தொகை அதிகரித்து வருவதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. காத்தான்குடி பகுதியிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் கடந்த 24 மணித்தியாலங்களில் காத்தான்குடி பகுதியில் மட்டும் 20 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதே போன்று மட்டக்களப்பில் ஒருவரும் ஏறாவூர் பகுதியில் மூவரும் வெல்லாவெளி பகுதியில் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தொற்றாளர்களின் எண்ணிக்கை 333ஆக அதிகரித்துள்ளது.

இதே போன்று அம்பாறை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் 23பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்தியத்தில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருவதுடன் அடுத்தபடியாக உகன பகுதியில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் இதுவரையில் 968 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் கல்முனை பிராந்தியத்தில் மட்டும் 915பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top