உள்நாட்டு செய்திகள்

கிழக்கில் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை(7 திங்கள் திறக்கப்படுமா??

கிழக்கில் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை(7 திங்கள் திறக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் கிழக்கு ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று6) ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பார்.
கொரோனா மற்றும் புரவி சூறாவளிக்காக கடந்தவாரம் மூடப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகளின் விடுமுறை கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவுக்குவந்தது.
எனவே இப்பாடசாலைகள் நாளை திங்கட்கிழமை(7) மீண்டும் திறக்கப்படுமா? என்று மாணவர்களும் பெற்றோர்களும் கேட்கின்றனர்.
அக்கரைப்பற்றுக் கொத்தணியின் கொரோனாப்பரவலையடுத்து கல்முனைக்கல்வி மாவட்டத்தைச்சேர்ந்த கல்முனைசம்மாந்துறை அக்கரைப்பற்று திருக்கோவில் ஆகிய 4 வலயங்களையும் சேர்ந்த 225பாடசாலைகள் கடந்த வெள்ளியன்று இழுத்து மூடப்பட்டன.கல்முனைக்கல்வி மாவட்டத்தில் கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று திருக்கோவில் ஆகிய நான்கு வலயங்கள் அடங்குகின்றன. இந்த 4வலயங்களிலும் 252 பாடசாலைகள் உள்ளன. 6139ஆசிரியாகள் பணியாற்றுகின்றனர். 1லட்சத்து 41ஆயிரத்து 68மாணவர்கள் கல்விபயில்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்றகான உத்தரவை கிழக்கு மாகாண அளுநர் அனுராதா யஹம்பத் பிறப்பித்திருந்தார். அதேவேறை அவர் புரவி சூறாவளியையொட்டி கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தையும் 3நாட்களுக்கு அதாவது கடந்த வெள்ளிக்கிழமை வரை மூடுமாறு உத்தவிட்டிருந்தார்.அதன்படி கிழக்கில் சகல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
திங்களன்று கல்முனை கல்வி மாவட்டம் தவிர்ந்த ஏனைய மட்டக்களப்பு திருமலை அம்பாறை மாவட்டபாடசாலைகள் திறக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் கல்முனைப்பிராந்தியத்தில் கொரானா தொற்றுக்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்துச்செல்வதால் குறித்த 252 பாடசாலைகளும் திங்களன்று திறக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகத் தென்படுவதாகத் தெரிகிறது.
இருந்தபோதிலும் அங்குள்ள பாடசாலைகளில் க.பொ.த. சா.தர வகுப்புகளையாவது ஆரம்பிக்கலாம் என கல்வித்திணைக்கள அதிகாரிகள் அபிப்பிராயம் வெளியிட்டதாகவும் தெரியவருகிறது.
எது எப்படியிருப்பினும் ஆளுநர்தான் இது தொடர்பாக அறிவிக்கவேண்டும். அதுவரை பொறுத்திருங்கள் எனக்கூறப்படுகிறது. கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறையினரை சந்தித்து கலந்துரையாடியபின்னர் பெரும்பாலும் நாளை ஞாயிறன்று ஆளுநர் பாடசாலை மீளத்திறப்பது தொடர்பாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top