இலங்கையின் மல்லாவி – வவுனிக்குளம் பகுதியில் மகேந்திரா வகை ஜீப் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் மாயமாகியுள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வாகனத்தில் 4 பேர் பயணித்த நிலையில் ஒருவர் கரையேறியுள்ளார். மற்றைய மூவரை தேடும் பணியில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இந் நிலையில் ஒரு குழந்தை உட்பட இன்னும் இருவரை காணவில்லை. இதனால் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது.
