உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொடர்பான குற்றச்சாட்டுகளை நிராகரித்து ப்ரெண்டிக்ஸ் நிறுவனம் விளக்கம்!

மினுவாங்கொட பகுதியில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ள ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது,

இந்தியர்கள் அல்லது வேறு எந்த வெளிநாட்டினரும் மினுவாங்கொடவிலுள்ள எமது தொழிற்சாலைக்கு அண்மைய காலகட்டத்தில் வந்திருக்கவில்லையென்பதை உறுதி செய்கிறோம். இதேபோல, இந்தியாவிலிருந்து எந்த துணி வகைகளையும் கொள்வனவு செய்யவோ, அவற்றை பாவிக்கவோ இல்லையென்பதையும் உறுதி செய்கிறோம்.

இந்தியாவிலுள்ள ப்ரெண்டிக்ஸ் நிறுவன கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் நாடு திரும்புவதற்கு, விசாக பட்டினத்திலிருந்து 3 விமானங்களை இயக்கினோம். இந்தியாவில் பணியாற்றிய ஊழியர்களும், அவர்களின் குடும்பங்களும் நாடு திரும்பினர்.

நாடு திரும்பிய எமது ஊழியர்களும், அவர்களின் குடும்பத்தினரும் இலங்கை அரசு நடைமுறைப்படுத்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாகக் கடைப்பிடித்தார்கள். பிசிஆர் பரிசோதனை, அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் 14 நாள் தனிமைப்படுத்தல், பின்னர் பிரதேச சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையில் 14 நாள் சுயதனிமைப்படுத்தலை அவர்கள் மேற்கொண்டனர்.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய எமது ஊழியர்கள் யாரும் மினுவாங்கொட தொழிற்சாலைக்கு வரவில்லை.
அத்துடன், நிறுவனத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட பின்னர், நிறுவன ஊழியர்களை பணிக்கு வருமாறு வற்புறுத்தப்பட்டதாக பரவும் வீடியோ காட்சியை நிராகரிக்கிறோம். அதில் தோன்றும் யாரும் ப்ரெண்டிக்ஸின் ஊழியர்கள் அல்ல எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top